புதினங்களின் சங்கமம்

புங்குடுதீவில் மாட்டை இறைச்சியாக்கிய கொள்ளையர்களுக்கு நடந்த கதி!!

புங்குடுதீவில் கள்ள மாடு பிடித்து அதனை இறைச்சியாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் 3 பேர்
கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட இறைச்சியும் மாடு வெட்டப் பயன்படுத்தப்பட்ட கத்திகளும் ஊர்காவற்றுறை
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் வெற்றுக் காணி
ஒன்றுக்குள் மாடு வெட்டிக் கொண்டிருந்தபோது இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று
காவலர்கள் கூறுகின்றனர்.

மண்டைதீவு காவல் சாவடிப் பொறுப்பதிகாரி துணை ஆய்வாளர் தலைமையிலான அணியினரால் கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 30, 40 வயதையுடையவர்கள். அவர்களிடமிருந்து வெட்டப்பட்ட
மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

கடந்த ஓரிரு நாட்களில் மாடுகள் காணாமற்போனமை தொடர்பாக புங்குடுதீவில் எந்தவொரு
முறைப்பாடு பதிவாகவில்லை என்பதால் வெட்டப்பட்டது கட்டாக்காலி மாடாக இருக்கலாம் என்று
காவல்துறையினர் கருதுகின்றனர்.