விபத்தில் காயமடைந்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் பலி!!! (Photos)
முல்லைத்தீவு, முளியவளையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் விபத்தின் போது காமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
முள்ளியவளை சேர்ந்த 23 வயதுடைய தனுசியன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த வாரம் கோடாலிக்கல்-நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதி குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

