மூன்றரை கோடி பெறுமதியான சிறிதரன் எம்பி யின் வாகனம் எங்கே?
பேஸ்புக் பக்கத்தில் வந்த தகவலை அப்படியே இங்கே தந்துள்ளோம்.
3 கோடியே 34 இலட்சத்து 59 ஆயிரத்து 250 ரூபா பெறுமதியானது சிறிதரன் எம்பியின் வாகனம்
இதுவே Toyota land cruiser என்ற அதி சொகுசு வாகனம். 2016 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் சி் சிறிதரன் அவர்கள் இதனையே தெரிவு செய்துபெற்றுள்ளார் என சட்டத்தரணி என்.கொடித்துவக்கு தகவலை பெற்று வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு தடவையும் எம்பியாக தெரிவு செய்யப்படும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அனுமதி பத்திரம் வழங்க்கப்படுகிறது. அந்த வகையில் சிறிதரன் எம்பிக்கும் இதுவரை இவ்வாறு இரண்டு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்பட்டிருக்கும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படுவதும் அதனை அவர்கள் கோடிக் கணக்கில் விற்பனை செய்வதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமோ, புதுவிடயமோ அல்ல. ஆனால் சிறிதரன் எம்பி தொடர்பில் மட்டும் ஏன் பேசப்படுகிறது?
தான் ஒரு கஸ்ரப்பட்ட எம்பி, சாதாரனமாக ஒரு பழைய வெள்ளை வான் மாத்திரமே என்னிடம் உண்டு, என மக்களையும் அவரது தொண்டர்களையும் அவர் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றமையால்தான் அவர் தொடர்பில் பலரும் கவனம் செலுத்த காரணமாக அமைந்துள்ளது.
முதலாவது comment இல் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் 23 பெயராக இவரது பெயர் உள்ளது