புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் விபத்து! தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்!! ஒருவர் பலி!! வீடியோ

வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருக்கள் புதுக்குளத்தில் இருந்து தம்பனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற 30 வயது நபரே  மின்கம்பத்தில் மோதுண்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்கம்பி அறுந்த நிலையில் அவ்விடம் காணப்படுவதனால், அந்த மின்கம்பி ஏற்கெனவே அறுந்து விழுந்திருந்ததா அல்லது விபத்து ஏற்பட்டபோது அறுந்து விழுந்ததா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் எனும் 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (26) பிற்பகல் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

May be an image of 1 person, smiling and text