யாழ்ப்பாணத்தில் மனைவியி்ன் தங்கையை துரத்தித் துரத்தி வெட்டிய கணவன்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் கணவன் – மனைவியின் தகராற்றினை விலக்க முற்பட்ட மனைவியின் தங்கையை கணவன் சரமாரியாக வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார்.

கொடிகாமம் வெள்ளாம் பொக்கட்டி என்ற பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில காலமாக பிரிந்துவாழும் கணவன், இன்று மாலை மனைவியை சந்தித்த்து வாக்குவாதப் பட்டிருக்கின்றார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றதாகவும் அதனை அடுத்து கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை சரமாரியாக வெட்டியதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சசிகலா (வயது23) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளளார்.

error

Enjoy this blog? Please spread the word :)