Home புதினங்களின் சங்கமம் ஜூன் 20 ஆம் திகதியும் பொதுத்தேர்தல் நடைபெறச் சாத்தியமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜூன் 20 ஆம் திகதியும் பொதுத்தேர்தல் நடைபெறச் சாத்தியமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை எகவும், அதற்கான முன்னாயத்த பணிகள் எவையும் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாக தேர்தலை பிறிதொரு திகதியில் நடத்துவதே சாத்தியமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையானத் தேர்தல் திகதி குறிப்பிடப்பட்டு விசேட வர்த்தமானி ஊடாக தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிலவும் சூழ்நிலை காரணமாக, அன்று தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தனது கவனத்தை செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜூன் 20 ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ன. இது குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி திட்டமிடப்பட்டது. இருப்பினும், கோவிடி -19 தொற்றுநோய் காரணமாக தேர்தலை ஜூன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.