ஆடு மற்றும் பப்பாளி பழத்தில் கொரோனா வைரஸ்: தன்சானிய அதிபர் கருத்தால் பெரும் பரரப்பு
உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் ,480 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 16 பேர் உயிர் இழந்துள்ளனர்.167 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் தன்சானியா நாடு கொரோனா வைரசை கண்டறியும் மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்தார். இதனை சீன நிறுவனம் ஒன்றே அன் நாட்டுக்கு விற்றுள்ளது. இதில் பெரும் சந்தேகம் கொண்ட அதிபர். ஒரு நூதனமான விடையத்தை கையாண்டார். ஆட்டு ரத்தத்தையும் மற்றும் பப்பாளி பழத்தின் ஒரு சில பகுதிகளையும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளார்.
அங்கே உள்ளவர்களுக்கு எந்த ஒரு விடையத்தையும் அவர்கள் கூறவில்லை. சீனா கொடுத்த மருத்துவ கருவிகளை கொண்டு இதனை பரிசோதனை செய்தவேளை ஆட்டு ரத்தத்திலும் மற்றும் பப்பாளி பழத்திலும் கொரோனா வைரஸ் இருப்பதாக கருவிகள் பிழையான தகவலை தந்துள்ளது. இதனை காட்டி, சீனா நிறுவனத்தின் தோலை உரித்து தொங்கப் போட்டுள்ளார் தன்சானிய நாட்டு அதிபர். பாருங்கள் எதில் எல்லாம் பிராடு தனம் செய்கிறார்கள் என்று.
பஞ்சப்பட்ட நாடு தானே என்ன மருத்துவக் கருவியை கொடுத்தால் என்ன என்று சீன நிறுவனம் தலையில் மிளகாய் அரைத்துள்ளது.

