முன்பிணை கோரினார் வலி.கிழக்கு தவிசாளர்! புதன் கிழமை வழக்கு விசாரணை!
தன்னை பொலிஸார் கைது செய்வதற்கு முயற்சி செய்வதாகத் தெரிவித்து தனக்கு முன் பிணை வழங்குமாறு மல்லாகம் நீதிமன்றில் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணை புதன்கிழமை வரை நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மணிவண்ணன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த மனுவினை விசாரித்த நீதிபதி, பொலிஸாரின் தரப்பு நியாயங்களையும் கோரவேண்டும் என்பதால் எதிர்வரும் புதன்கிழமை வரை விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
எனவே எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்குமாறு அச்சுவேலி பொலிஸாருக்கும் நீதிபதி அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

