லண்டனிலிருந்து 207 மாணவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்!
லண்டனில் சிக்கித் தவித்த 207 இலங்கை மாணவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டனர்.
லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்துசேர்ந்தது.
இலங்கை விமானப்படையின் உதவியுடன் மாணவர்களுக்கு தொற்று நீக்கம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை இரண்டாவது தொகுதியாக இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக மற்றொரு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டுநாயக்கவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது.

