மன்னாரில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்!
மன்னார் முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவமானது இன்று (24) காலையில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.