புதினங்களின் சங்கமம்

ஊரடங்கு நேரத்தில் 18 வயது காவாலியால் 79 வயது மூதாட்டி கொடூர வல்லுறவு!!

பேருவளை பகுதியில் ஊரடங்கு உத்தரவின் போது ஜெர்மனிய பிரஜையான மூதாட்டியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவட்டை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த 79 வயதான ஜெர்மனிய மூதாட்டியே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 18 வயதான இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த 29ஆம் திகதி இரவு மூதாட்டி துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞன் தொடர்பாக ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரை களுத்துறை நீதிவான் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.