புதினங்களின் சங்கமம்

கொரோனாவின் அடுத்த அலைகளை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும்; உலக சுகாதார அமைப்பு !

கொரோனாவின் இரண்டாவது அல்லது மூன்றாவது அலைகளை எதிா்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என உல க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொவிட்-19 அச்சுறுத்தல் குறைந்துவிட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது. இத்தொற்று நோய்க்கான தடுப்பூசி கிடைக்கும் வரை எதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் தொற்றுநோய் உச்சத்தைக் கடக்கும் சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றமை மகிழ்ச்சியான விடயமே. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இன்னும் தொற்றுநோயின் பிடியிலேயே சிக்கியுள்ளன என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான தலைவா் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் கூறினார்.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சி வளா்ச்சிப் போக்கில் உள்ளது. இத்தத் தடுப்பூசி வெற்றியளித்தால் துரிதமாக அதிகளவாக உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக சா்வதேச மருந்து விநியோக நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் கூட்டு சேருவதாக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்த பின்னர் அவரிடம் இருந்து இவ்வாறான கருத்து வெளியாகியுள்ளது.

மிகச் சிறந்த சுகாதார அமைப்புக்கள் இருந்தாலும் கூட கொரோனாவால் பேரழிவைச் சந்திக்க நேரிடலாம் என்பதே வெவ்வேறு நாடுகளில் இருந்து நாம் மிகத் தெளிவாகக் கற்றுக்கொண்ட பாடமாகும்.

இந்த கட்டத்தில் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய படிப்பினை என்னவென்றால் அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டு மக்களின் ஆரோக்கியமே பிரதானமானது.

ஆரோக்கியம் என்பது பொருளாதாரத்தின் மூலதனம். ஆரோக்கியம் இல்லாமல், பொருளாதாரம் இல்லை என்பதையே இப்போது நாங்கள் நேரடியாகக் கண்டுக்கொண்வருகிறோம்.

ஆரோக்கியமற்ற நாட்டில் தேசிய பாதுகாப்பும் சிறப்பாக இருக்காது.

முதலில் தொற்று நோயைக் கட்டுப்படுத்தி அதிலிருந்து வெளியே வருவதே உலக நாடுகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும். தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பின்னா் அனைவரும் ஒன்றுபட்டு அரசியல், பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கலாம்.