புதினங்களின் சங்கமம்

யாழில் கசிப்பு காய்ச்சியவர்களால் பிரதேசசபை உறுப்பினர் துரத்தித்துரத்தி வெட்டபட்டார்!!

இன்று வாள்வெட்டிற்கு இலக்கான பிரதேசசபை உறுப்பினரின் காது ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவரை வெட்டியதாக குறிப்பிடப்பட்ட, வாள்வெட்டிற்கு இலக்கான மற்றைய நபரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதேவேளை, அவருடன் துணையாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் விரிவான செய்திகள்

யாழ்.சாவகச்சோி- மறவன்பிலவு பகுதியில்சாவகச்சோி பிரதே சபை உறுப்பினர் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த உறுப்பினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

மேலும் இந்த சம்பவம் இன்று இரவு 7.0 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. மறவன்புலவில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர்,

பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.சாவகச்சேரி பிரதேச சபையின் மறவன்புலவு வட்டார உறுப்பினர்

அரியகுட்டி நிமலறோகன் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர், மறவன்புலவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டதோடு சாவகச்சேரி பிரதேச சபையில் இன்று இடம்பெற்ற சிறப்பு அமர்வில் மறவன்புலவில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தி தொடர்பில் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.

Image may contain: 1 person, close-upImage may contain: text