லண்டனில் குடும்பத் தகராறில் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் இரு குழந்தைகள் படுகொலை!!(Video)
இங்கிலாந்தில் கிழக்கு லண்டனின் lford பிரதேசத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு வயதான பெண் குழந்தை மற்றும் மூன்று வயதான சிறுவன் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோவிற்கு இங்கு அழுத்துங்கள்
Video click here
இதேவேளை 40 வயதான நபர் ஒருவர் கத்தி குத்து காரணமாக படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தி குத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 அளவில் நடந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே பெண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த இக் குடும்பத்தினர் இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோரிற்கு மேல் வசித்து வந்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த இவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியதாகவும் தாய், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளை கொண்ட இந்த குடும்பம் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வருவதாகவும் 64 வயதான ஹர்ஷத் பட்டேல் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அறிந்தவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

