டயலொக் நிறுவனம் செய்த அலங்கோல வேலை!! அவதானம் பாவனையாளர்களே!!!
ஒரு ஆளிட்ட 50 ரூபாப்படி 50 பேரிட்ட அடிச்சா. அதுவே 50 ஆயிரம் பேரிட்ட எண்டா……………0000000000000000 ???
டயலொக் ரூ டயலொக் 1000 நிமிட பக்கேச் (மாதம் 345 ரூபா) என்னிடம் இருந்தது. அவசரமாக மொபிட்டல் இலக்கமொன்றிற்கு கதைக்கவேண்டியிருந்ததால் கடந்தவாரம் எனது தொலைபேசிக்கு 50 ரூபா காட் வாங்கி போட்டு 03 நிமிடம் கதைத்துவிட்டு வைத்துவிட்டேன் சுமார் 5 ரூபா வரை வெட்டியிருந்தது.
பின்பு பார்த்தால் தினமும் 07 ரூபா வீதம் காலை மாலை என காசு வெட்டப்படுவதாக தொலைபேசியின் டிஸ்பிளேயில் குறுந்தகவல் வந்து மறைந்தவாறு இருந்தது. ஒரு கட்டத்தில் ழுமுப் பணமும் தீர்ந்துவிட்டது.
கடும் சினமடைந்த நான் டயலொக் வாடிக்கையாளர் சேவை முகவருக்கு 0777678678 அழைப்பெடுத்தேன்.
Dialog நிறுவனத்தினர் – வணக்கம், சொல்லுங்கோ சேர்
#நான் – ஓம் வணக்கம், இந்தத் தொலைபேசிக்கு நான் எப்போது றீலோட் செய்திருந்தேன் என கூற முடியுமா.
Dialog நிறுவனத்தினர் – ஓம் சேர் அழைப்பில் காத்திருக்கவும்……… காத்திருந்ததற்கு நன்றி சேர். 17 ஆம் திகதி 50 ரூபா றீலோட் செய்திருக்கிறீங்க சேர்.
#நான் – சரி. நான் அந்த 50 ழூபாவில எத்தின நிமிசம் டயலொக் அல்லாத தொலைபெசி அழைப்பு எடுத்திருக்கன். அதற்கு எவ்வளவு ரூபா வெட்டினீங்க.
Dialog நிறுவனத்தினர் – 3 நிமிசம்வரை கதைச்சிருக்கிறீங்க சேர். 5 ரூபா வரை வெட்டியிருக்கு சேர்.
#நான் – வேறு ஏதாவது கோல் கதைச்சு வெட்டியிருக்கா.
Dialog நிறுவனத்தினர் – இல்லை சேர். நீங்க 1000 நிமிட பக்கேச் பாவிக்கிறதால வேறு அழைப்புக்களுக்கு காசு வெட்டல சேர்.
#நான் – சரி. அந்த 1000 நிமிச பக்கேச்சில எத்தின MB Data இருக்கு என்று பார்ததுச் சொல்ல முடியுமா.
Dialog நிறுவனத்தினர் – ஓம் சேர். அழைப்பில் காத்திருக்கவும். நான்றி சேர். 950 MB இருக்கு சேர்.
#நான் – அப்ப சரி. நான் 50 ரூபா றீலோட்டில Data பாவிக்கல எண்டுறத ஒத்துக் கொள்கிறீங்கள் தானே.
Dialog நிறுவனத்தினர் – ஓம். சேர். நீங்க பக்கேச் Data தான் பாவித்திருக்கிறீங்க. அது இன்னும் முடியல. 950 MB இருக்கு சேர்.
#நான்– அப்படின்னா எதுக்கு தினமும் காலை மாலை என 07 ரூபாப்படி வெட்டி என் றீலோட் காசை ஆட்டையைப் போட்டிங்கள் என விளக்க முடியுமா.
Dialog நிறுவனத்தினர் – அது சேர்……………வந்து சேர்……………… அழைப்பில் காத்திருங்க சேர். நாங்கள் செக் பண்ணுறம்……………………….. அழைப்பில் காத்திருந்தமைக்கு நன்றி சேர். அது சேர் நீங்க Google Use பண்ணி இருக்கீங்க சேர் அதுதான் வெட்டி இருக்கு.
#நான் – (கொஞ்சம் கடுப்பாகி) யாரைப் பேக்காட்டுறியள். Google பார்த்தா Data தானே வெட்டுவீங்க. என்கிட்ட Data இருக்கு. உப்பிடித்தான் சனத்திட்ட கொள்ளையடிப்பீங்களோ. 50 ரூபா எண்டாலும் உங்களைச் சும்மா விடமாட்டன்.
Dialog நிறுவனத்தினர் – இல்லை சேர் நீங்க Google பார்க்கும் போது விளம்பரம் ஒன்று வந்திருக்கும் சேர் அதைக் கிளிக் பண்ணினா. காசு வெட்டும் சேர்.
#நான் – நான் எந்த விளம்பரமும் பார்க்கவும் இல்லை. கிளிக் செய்யவும் இல்லை. அப்படி Google விளம்பரத்தை கிளிக் செய்தாக் கூட நீங்கள் எப்படி காசு வெட்டுவீர்கள்.
Dialog நிறுவனத்தினர் – இல்லை சேர் அது ஓட்டமற்றிக் விளம்பரம் சேர். தவறுதலா கிளிக் பண்ணியிருந்தாலும் காசு வெட்டும் சேர். நான் உங்களுக்கு உடனடியா அந்த சேவையை Cut பண்ணி விடுறன் சேர்.
#நான் – யோவ், உங்களுக்கும் கூகுளில வாற விளம்பரக் கொம்பனிக்கும் என்ன கள்ளத் தொடர்போ. அங்க பார்த்தா இங்க வெட்டுறதுக்கு. ஆரைப் பேக்காட்டுறியள்.
Dialog நிறுவனத்தினர் – இல்லை சேர். சொறி சேர். நான் அந்த விளம்பரத்தை Cut பண்ணிட்டன் சேர். எனி உங்களுக்கு காசு வெட்டாது சேர். நாங்கள் வெட்டின உங்களின் காசையும் திரும்ப தந்திடுறம் சேர். சொறி சேர். காசு வெட்டின எங்கண்ட ரீமிற்கு கொம்பிளைன் ஒண்டும் போடுறம் சேர்.
#நான் – உங்கள் பிராடுத்தனம் எனக்கு விளங்கினதால. கதைச்சன் தவறு எனக் கூறி காதை திரும்பத் தாறன் எண்டுறியள். இப்பிடியே விபரம் தெரியாத ஆரன் ஏழையள் சிக்கியிருந்தா ? உப்பிடித்தன் ஆற்றையன் னாசை ஆட்டையைப் போட்டு பிழைப்பு நடத்திறியளோ. வெட்டின காசைத் திரும்பத் தந்தாலும் உங்களைச் சும்மா விடமாட்டன். உந்த மானங்கெட்ட பிழைப்பிற்கு நீங்கள் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.
Dialog நிறுவனத்தினர் – அழைப்பு துண்டிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் வெட்டிய காசு எனது கணக்கிற்கு வந்து சேர்ந்தது.
(முறைப்பாட்டு இலக்கம் மற்றும், பணம் மீளத் திரும்பிய ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.)
நன்றி


