புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – பிறந்த குழந்தை உயிரிழப்பு !!

சற்று முன்னர் இலங்கையின் 415 கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு த சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.