வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா!!
வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த 29 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த கடற்படை சிப்பாய்களுக்கு வைரஸ் தொற்று ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்த தொற்றாளர்களை தேடி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பின்னர் கடற்படை தளபதியின் உத்தரவின் பேரில் வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னர் கடற்படை முகாமில் கடற்படை வீரர் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்படிருந்தார்.
அதன்படியே மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கடற்படை முகாமை சேர்ந்த 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

