புதினங்களின் சங்கமம்

கொரோனா ரணகளத்திலும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டையில் ஒருவர் பலி.!!

விழுப்புரம் மாவட்டம் யுவராஜ் (22). இவர் விஜய் ரசிகர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் திணேஷ்பாபு (22). இவர் ரஜினி ரசிகர்.இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
மது போதை அதிகமான நிலையில் கொரோனா நிவாரணமாக ரஜினி அதிக நிதி கொடுத்தாரா? விஜய் அதிகமாக நிதி கொடுத்தாரா? என விவாதம் எழுந்துள்ளது. கைகலப்பு முற்றிய நிலையில், போதையில் திணேஷ்பாபு, யுவராஜை கீழே பிடித்து வேகமாக தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.