புதினங்களின் சங்கமம்

புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த 6 வயதுச் சிறுவனுக்கு யாழில் நடந்த கொடுமை!!

தாகத்­தில் சோடா என நினைத்து மண்­ணெண் ணையை அருந்­திய 6 வய­துச் சிறு­வன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான். இந்­தச் சம்­ப­வம் நேற்­றுக் கைத­டி­யில் நடந்­துள்­ளது.

நேற்­றுக் காலை புலம் பெ­யர் நாட்­டில் இருந்து ஒரு குடும்­பத்­தி­னர் கைத­டிக்கு வந்­துள்­ள­னர். அந்­தக் குடும்­பத்­தைச் சேர்ந்த சிறு­வனே சோடா என்று நினைத்து மண்­ணெண்­ணையை அருந்­தி­யுள்­ளான். கடும் தாகத்­தில் வந்த சிறு­வன் சோடாப் போத்­த­லில் நிரப்­பப்­பட்­டி­ருந்த மண்­ணெண்­ணையை சோடா என நினைத்து அருந்­தி­யுள்­ளான்.

சிறு­வன் உட­ன­டி­யா­கச் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்­குச் சேர்க்­கப்­பட்­டுள்­ளான். அங்­கி­ருந்து மேல­திக சிகிச்­சைக்­கா­கச் சிறு­வன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளான் என்று தெரி­விக்­கப்­பட்­டது.