யாழில் கொள்ளையடித்த நகைகளை இந்தியாவுக்கு கடத்தல்!! 14 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது!! நகைக்கடை முதலாளி யார்?
யாழ்ப்பாணத்திலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 137 மில்லியன் (13 கோடியே 70 லட்சம் ரூபா) பெறுமதியான 14 கிலோ 360 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாதகல் கடற்பரப்பில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்திய போது, 14 கிலோ 360 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை கடத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் மாதகலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று மாலை ஒப்படைக்கப்படுவர். அவர்களிடம் மீட்கப்பட்ட தங்கமும் சுங்கத் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படும்” என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
“யாழ்ப்பாணத்தில் கொள்ளையிடப்படும் நகைகளை கொள்ளையர்களிடம் வாங்கி அவற்றை நகைக் கடை உரிமையாளர் ஒருவரால் உருக்கி தங்கக் கட்டிகளாக வழங்கப்படும். அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றோம். இதற்கு முன்னரும் இவ்வாறான கடத்தில் ஈடுபட்டுள்ளோம்”என்று சந்தேகநபர்களான டிலான், ருசாந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர் என கடற்படைத் தகவல்கள் தெரிவித்தன.

