11 வயதுச் சிறுவனு்ககு எமனாகியது கணவாய் மீன்!! மட்டு‘வில் சம்பவம்!! (Video)
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த பதினொரு வயது சிறுவன் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சிகிட்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குடும்பத்தில் இரண்டாவது மகனான 11 வயதுடைய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த சிறுவனே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் கடந்த சனிக்கிழமை மீன் வியாபாரியிடம் கணவாய் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டதன் பின்னரே இவ்வாறு சுகயீனமுற்றிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஏனைய நால்வரும் தொடர்ந்தும் சிகிட்சை பெற்று வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும் காத்தான்குடி பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பழுதடைந்த உணவை விற்று தமிழ் சிறார்களை கொலை செய்யும் வியாபரிகள்!!!
மட்டக்களப்பு கல்லடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் கணவாய் மீன் கறி உணவருந்திய பின் ஒவ்வாமையால் தொடர்ந்து வயிற்றோட்டம் வாந்திபேதியால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில்
10 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து உணவுகள் பழுதடைந்த நாட்பட்டவற்றவற்றை வியாபரிகள் பணத்திற்காக விற்பதால் உணவு ஒவ்வாமை பெரும்பாலும் சிறாரையும் வயோதிபர்களையும் தொடர்ச்சியாக நீரிழப்புடன் அனபைல்டிக் சொக் உடன் மரணிப்பது அதிகரித்துள்ளது .
பழைய போமலின் இட்ட மீன்களை வெளிமாவட்டங்களிலிருந்து கூலரில் கொண்டு வந்து மட்டக்களப்பு கிராம புறங்களில் அறிமுகமில்லாத மீனவர்கள் மல்வு விலையில் விற்கின்றார்கள்தானே என்று மக்களும் இவர்களிடம் கொள்வனவு செய்வதால் இவ்வாறன துர்ப்பாக்கிய மரணங்கள் நிகழ்கின்றது.
கடந்த வருடம் திருகோணமலை கவிஸ்கன்(5வயது) சிறுவன் கடையில் வாங்கிய ரோல்ஸ் உண்ட உடன் மரணமாகியது குறிப்பிடத்தக்கது.

