Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலை சத்தியமூர்த்தி உட்பட ஒருசில வைத்தியர்களின் ‘கில்மா‘ விளையாட்டுக்கள்!!!

இலங்கை முழுவதும் கொரோனா அபாயத்தில் சிக்கியுள்ள சூழ்நிலையில் இலங்கையில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய மருத்துவமனைகளில் உள்ள வைத்திய அதிகாரிகள் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டு வரும் போதும் யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோழி முட்டையிட்டுவிட்டுக் கொக்கரிப்பது போல் கொக்கரிப்பதாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுத் தொடங்கியுள்ளன.

யாழ் போதனாவைத்தியசாலைக்கு மட்டும் பொறுப்பாயிருக்கும் சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் முழுவதற்கும் நானே பொறுப்பு என்ற நினைப்பில் ஊடகங்கள் முன் தலையைக் காட்டி தண்டோராப் போட்டு வருவதாகவும் கொழும்பில் மிக ஆபத்தான இடமாகக் கருதப்படும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி தனது வேலையை சிறப்பாகச் செய்துவரும் வேளையில் சத்தியமூர்த்தி எதற்காக இவ்வாறு தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

சத்திமூர்த்தி ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்குவது எனின் யாழ் போதனாவைத்தியசாலை தகவல்களை மாத்திரமே வழங்கலாமே தவிர யாழ்ப்ாணத்தில் நடக்கும் சம்பவங்களை அவர் வழங்குவது தவறானது எனவும் அது தொடர்பாக யாழ் சுகாதாரப் பணிப்பாளர் அல்லது வடக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளரே தகவல்களை வழங்கலாம் எனவும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சத்திமூர்த்தியை விட யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளர் பிரிவில் வேலை செய்யும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களே தியாகிகள் எனவும் அவர்களின் தியாகங்களை வைத்து சத்தியமூர்த்தி உட்பட ஏனைய ஒருசில வைத்தியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலை கொரோனாப் பிரிவில் சத்தியமூர்த்தி தன்னுடன் ஒத்துழைக்காத தனது தவறுகளை சுட்டிக்காட்டும் உத்தியோகத்தர்களையே பழிவாங்கும் முகமாக அதற்குள் நியமித்துள்ளார் எனவும் அங்கு கடமையாற்றுபவர்களில் பலர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் சில ஊழியர்களுக்கு சிறு குழந்தைகள் உள்ளதாகவும் அவ்வாறானவர்களை எவ்வாறு சத்தியமூர்த்தி அந்த பிரிவுக்குள் நியமிப்பார் எனவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சத்தியமூர்த்தி தான் செய்யும் பாரிய சில தவறுகளை மூடிமறைக்க தனக்கு சார்பாக உள்ள சில மீடியாக்களைப் பயன்படுத்தி தன்னை உயர்த்திக் கொள்ள முற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளன. அத்தடன் சத்தியமூர்த்தி தனக்கு எதிராக முகப்புத்தகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிடுபவர்களை பொலிசாரிடம் மாட்டி சிக்கலில் விடுவதாகவும் தன்னைப் புகழ்பவர்களையே தன்னுடன் கூட வைத்துக் கொண்டு அலங்கோல வேலைகள் செய்து வருவதாகவும் குறித்த தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு நேரங்களில் சலுான்கள் திறக்காத நேரத்தில் சத்தியமூர்த்தி உட்பட்ட சில வைத்தியர்கள் ‘ரிப்ரொப்பாக‘ தலைமயிர் கத்தரித்து வந்து ஊடங்களில் பேட்டி கொடுத்து தங்களை யாழ்ப்பாண கீறோக்கள் என்ற ரேஞ்சுக்கு மக்கள் முன் பீலா வி்ட்டுள்ளார்கள் எனவும் உண்மையில் கொரோனாவுக்கு எதிராக பாடுபட்டவர்கள் குறித்த வைத்தியசாலையில் அந்தப் பிரிவில் பணியாற்றிய வைத்தியர்களும் ஊழியர்களும் மற்றும் ஒவ்வொரு பிரதேசத்தில் செயற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்களுமே என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.