மலைக் குகைக்குள் சென்று தன்னைத் தானே சுட்டுக்கொன்ற குடும்பஸ்தர்!! மட்டு’வில் சம்பவம்!! (Photos)
வேப்பவெட்டுவான், பண்டாரக்கட்டு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் வேலாயுதம் (56) என்பவரே இவ்வாறு தன்னைத்தானே கட்டுத்துப்பாக்கியால் சுட்டு மரணித்தவராவார்.
மேற்படி வீதியில் வசித்த விவசாயியான இவர் 13/04 அன்று காணாமல் போன தனது மாடுகளை தேடிச்செல்ல வெளியாகியபோது,
நாளை (14/04) சித்திரை புத்தாண்டு தினமாக இருப்பதால் போகவேண்டாம் என மனைவி தடுக்க இருவருக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிச்சென்ற இவர் புளுட்டுமானோடையில் வேளான்மை செய்யும் நண்பர் ஒருவரின் வாடியிலேயே தங்கியிருந்துள்ளார்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கியிருந்த இவர் அவ்வாடி உரிமையாளரிடம்,
அவரது மனைவி பிள்ளைகளால் தனக்கு ஏற்படுத்தப்பட்ட வண்மங்களைப்பற்றியும், தலையிலும், விலாவிலும் மற்றும் கை விரல்களிலும் ஏற்பட்டிருந்த அடிகாயங்களையும் காட்டி வேதனையை வெளிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் 18/04 அன்று காலை வாடிச் சொந்தக்காரர் தனது வீட்டுக்கு சென்று மீண்டும் மாலை 04.00 மணிபோல் வாடிக்கு வந்த போது இவரை காணவில்லை.
மறுநாள் (19/04) காலை வரை இவர் வராததால் அவரது உறவுகளுக்கு விடயத்தை தெரியப்படுத்தியதும்,
புளுட்டுமானோடையெங்கும் நேற்றும் இன்றும் தேடுதல் நடாத்தி இன்று (20/04) காலை 10.30 மணியளவில் சடலமாக அடையாளம் கண்டுள்ளனர்.
புளுட்டுமானோடை மலை இடுக்கினுள் புகுந்து படுத்தவாறே, கழுத்தில் கட்டுத்துப்பாக்கியின் குழலை வைத்து கால் பெருவிரலினால் டிக்கரை அமிழ்த்தி வெடிக்க வைத்ததால் மண்டையோடு பிளந்த நிலையில் சடலம் காணப்பட்டது.
கௌரவ நீதிபதியின் கட்டளைக்கமைவாக, கரடியனாறு பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரனை அதிகாரி MSM நஸீர் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.











