புதினங்களின் சங்கமம்

யாழில் வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையடித்தவர்களின் மோட்டார் சைக்கிளை பிடித்த இளைஞர்கள்!!

யாழில்.வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்
இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு யாழ்.காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 31ஆம் திகதி வங்கியில் இருந்து பணம் எடுத்துகொண்டு துவிச்சக்கர வண்டியில்
வீடு திரும்பிக்கொண்டு இருந்த தாயார் ஒருவரை திருநெல்வேலி மணல் தரை ஒழுங்கைக்குள்
வைத்து தாக்கி விட்டு அவரது துவிசக்கர வண்டி கூடைக்குள் இருந்த பணப்பையை இரு இளைஞர்கள்
கொள்ளையிட்டு சென்றனர்.
அந்த பையினுள் 37ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 40ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி
என்பன இருந்துள்ளன.

குறித்த பெண் தாக்கப்படுவதனை அவதானித்தவர்கள் அவரை மீட்க சென்ற போது கொள்ளையர்கள்
அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். இருந்த போதிலும் அவர்களை அப்பகுதி இளைஞர்கள் சுமார்
ஒரு கிலோமீற்றர் தூரம் துரத்தி சென்றனர். இருந்த போதிலும் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகோ ரக மோட்டார் சைக்கிள் எனவும் டீபுர் 9328
இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் எனவும் அடையாளம் காணப்பட்டு காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.

காவல்துறையினரின்; விசாரணையின் வேகம் காணாது என அதிருப்தியடைந்த அப்பகுதி இளைஞர்கள்
மோட்டார் சைக்கிள் இலக்கத்தை கொண்டு அதன் உரிமையாளர் பொம்மை வெளி பகுதியை சேர்ந்தவர் என
கண்டறிந்து அவரது வீட்டுக்கு திங்கட்கிழமை இளைஞர்கள் சென்ற போது உரிமையாளர் அங்கிருந்து
தப்பி சென்றிருந்தார்.

அவ்வேளை வீட்டின் முன்னால் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் நின்றதனை அவதானித்த
இளைஞர்கள் அதனை மீட்டு யாழ்.காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.