சிம்புவையும் பிரபுதேவாவையும் பிரேக்கப் செய்ததன் காரணத்தை முதன் முறையாக போட்டுடைத்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஐயா திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன் னேறியுள்ளார். இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் ச ர்ச் சைகளில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில், தனது பழைய காதல்கள் குறித்து வாய் திறக்காத நயன்தாரா, தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில், பழைய காதல், காதலர்களை பிரிந்தது ஏன் என கூறியுள்ளார்.
அதில், நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அங்கிருந்து காதல்வெளியேறிவிடும். நம்பிக்கை இல்லாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு செய்து தனது காதலை முறித்துக்கொண்டதாக நயன்தாரா கூறியுள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)