மனதை உலுக்கும் சம்பவம்!
தாமதமான நீதி தந்த சமூக பரிசு.
மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்பாக, தனக்குரிய நீதி கிடைக்கவில்லை என்ற மனவேதனையுடன் தொடர்புபடுத்தப்படும் துயரச் சம்பவத்தில், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 66 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சகோதரர்களுக்கிடையிலான காணிப் பிரச்சினை தொடர்பாக 2022ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததாகவும், வழக்கின் தீர்ப்பு தொடர்பான மன உளைச்சலின் பின்னணியில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.




