புதினங்களின் சங்கமம்

யாழில் ஊரடங்கு தளர்த்துவதற்கு சாத்தியமே இல்லை!! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறுகின்றார்!!

தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்சல் சுமங்கல டயஸ் ஆகியோர் வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு ் அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார் மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதாக தெரிவித்தார்
ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள் மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம் எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது
விட்டால் ் நாம் எந்த வித செயற்பாட்டையும் ஈடுபட முடியாது எனவே வடக்கில் உள்ள மக்களிடம் நான் இந்த கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார் குறித்த விஜயத்தின் போது பலாலி விமான படை தளத்தில் முப்படையினர் பொலிஸாருடன் சந்திப்பு நடத்தவுள்ளனர்.