புதினங்களின் சங்கமம்

யாழில் பணம், பவுண் கொள்ளையர்கள் முதல், கோழி, தேங்காய் கொள்ளையர்கள் வரை தராளமாக நடமாட்டம்..!!

யாழ்.நகரை அண்டியிருக்கும் கந்தர்மடம் பழம் வீதியில் அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் 12 கோ ழிகளை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளர்கள் உறக்கத்தில் இருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

கொரோனா அச்சம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையி ல், யாழ்.மாவட்டத்தில் கொள்ளையர்கள் நடமாட்டம் மற்றும் கொள்ளை சம்பவங்கள் மிக சாதாரணமாக நடைபெ ற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்டத்தில் 7 திருடர்கள் கைது செய்யப்பட்டிருந்தபோதும், மாவட்டத்தில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கந்தர்மடம் பழம் வீதியில் நேற்று அதிகாலை நடந்ததுபோல்

கடந்த 10 நாட்களுக்கு முன்னரும் கூட ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதுடன், குறித்த பகுதியில் இரவு நேரங்களில் வீடுகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலினாலும் ஊரடங்கு சட்டத்தினாலும் முடக்கப்பட்டிருக்கும் வடக்கு மக்களுக்கு உதவுங்கள்..