Home புதினங்களின் சங்கமம் மின்னல் தாக்கி 15 வயது மாணவன் பிரதீப்குமார் பலி!

மின்னல் தாக்கி 15 வயது மாணவன் பிரதீப்குமார் பலி!

அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பகுதியில் வீட்டின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் அகலவத்தை மிஹிந்து மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த ஹசித பிரதீப் குமார என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் புள்ளி வழியாக பாய்ந்த மின்னலின் தாக்கம் மாணவனையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.