யாழ் உடுவில் சமுர்த்தி பெண் உத்தியோகத்தர் சோமாவதி அக்காச்சியின் திருவிளையாடல்!!
அரச ஊழியர்களில் ஆண்களை விட பெண்களே பெரும் ஊழல் பெருச்சாளிகளாக இருப்பதாக தற்போது பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் யாழ் உடுவில் பகுதி பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் சோமாவதி என்பவர் செய்யும் திருவிளையாடலலை முகப்புத்தகத்தில் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.
#யாழ் மாவட்டத்தில் #உடுவில் பிரதேச #ஏழாலை #கிழக்கு..
#சமூர்த்தி உத்தியோகத்தர் #சோமாவதி அக்காச்சியின் #கவனத்திற்கு..
சமூர்த்தியினால் வழங்கப்படும் 2500ரூபாய் உலர் உணவு பொதி,இதற்காக பயனாளிகளிடம் கையொப்பம் வாங்கிவிட்டு #2கிலை அரிசி
#2கிலோ கோதுமை மா
#1கிலோ சீனி
ஆகியவற்றை கையில் திணித்து வாயை அடைத்து விடுகின்றீர்.
இவ்வளவு பொருட்களுக்கும் குறைந்தது எவ்வளவு 500-600 ரூபாய் தேறுமா?
மிகுதி எந்த கணக்கில் வரும் என்று சொல்லுங்கோ?
அடுத்து நீங்கள் வங்கிக்கு கடன் பெறவோ அல்லது சமூர்த்தி முத்திரை கொடுப்பனவு பெறுவதற்காகவோ வரும் பயனாளிகளிடம் #பகல்12 மணிக்கு முதல் வந்தால் மட்டுமே தரமுடியும் மீறி வந்தால் அடுத்த மாதம் வரும்படியும் திருப்பி அனுப்பி விடுகின்றீர். அப்போ உங்களது வேலை எத்தனை மணித்தியாலங்கள்????
மற்றும் வயது வித்தியாசமின்றி பயனாளிகளிடத்தே தகாத வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்துகின்றீர்கள் இது பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல…
உங்களை போன்ற ஒரு சிலரினால்தான் நேர்மையான அதிகாரிகளுக்கும் அசிங்கம்.
இது வெறும் எச்சரிக்கை அடுத்த கட்டம் ஆதாரத்துடன் வரும் நினைவிருக்கட்டும்.
Bala Theivendiran


