புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் நிலவேம்பு கசாய பக்கெட்டை 1 பவுண்டுக்கு வாங்கி £20 பவுண்டுக்கு விற்ற கடைக்காரர்கள்

லண்டனில் பல தமிழ் மக்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கபப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதனை இவர்கள் வெளியே சொல்ல விரும்பவில்லை. இன் நிலையில் மொத்த இறக்குமதியாளர் ஒருவர். நல்ல நோக்கத்தோடு நிலவேம்பு கசாய பக்கெட்டுகளை இறக்குமதி செய்து. அதனை £1 பவுண்டுகளுக்கு கடைக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதனை கடை உரிமையாலர் சிலர் 7 பவுண்டுகளுக்கு விற்றார்கள். அதிலும் ஒரு படி மேலே போய் 20 பவுண்டுகளுக்கு கூட விற்று காசாக்கி உள்ளார்கள். வீட்டில் இருந்தபடி சில தமிழர்கள் இந்த நிலவேம்பு கசாயத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

காரணம் என்னவென்றால், தமக்கு கொரோனா தாக்கம் இருப்பதாகவும். தாங்கள் வீட்டில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். நிலவேம்பு கசாயம் என்பது ஒரு நல்ல சாறு. அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும். ஆனால் நாம் அதனை முன்னரே குடித்து வரவேண்டும். ஏன் எனில் அது எமது உடலில் வேலை செய்ய ஆரம்பிக்கவே சில நாட்கள் பிடிக்கும். ஆனால் கொரோனாவால் அவதியுறும் தமிழர்கள். இதனை £20 பவுண்டுகள் கூட கொடுத்து வாங்கி குடிக்க நினைப்பது தவறான விடையம்.

ஏன் எனில் கொரோனா வந்த பின்னர் இந்த நிலவேம்பு கசாயத்தை குடிப்பதில் பயன் இல்லை. அதன் பின்னர் சில நாட்களுக்கு பின்னரே அது வேலை செய்ய ஆரம்பிக்கும். எனவே குடிக்கவேண்டும் என்றால். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே குடித்துவிடுங்கள். நோய் தாக்கம் இருக்கும் போது குடிக்கவேண்டாம். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி. தமிழ் கடைக்காரர்களும் இதன் விலையை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.