புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரையில் 170 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் 135 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 27 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் அறிகுறிகளுடன் 250க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.