புதினங்களின் சங்கமம்

சமுர்த்தி முகாமையாளருக்கு அலங்கோலம் செய்த சாவகச்சேரி வைத்தியசாலை!!

விபத்தில் சிக்கி சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்ற சமுர்த்தி வங்கி முகாமையாளருக்கு மூன்று மணித்தியாலங்கள் தாண்டியும் மருந்து கட்டாமல் தவிக்க விட்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் இன்று காலை மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே பாய்ந்த குரங்கின் மீது மோதியதில் தடம்புரண்டுள்ளார். இதனால் கை மற்றும் தலைப்பகுதிகளில் ஏற்பட்ட உராய்வு காயங்களுக்கு மருந்து கட்ட சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது வெளிநோயாளர் பிரிவில் அவரை பார்வையிட்ட வைத்தியர் வைத்தியசாலை விடுதிக்கு அவரை அனுமதித்துள்ளார். ஆனால் விடுதியில் நீண்ட நேரமாகியும் மருந்து கட்டவில்லை என்று தெரிய வருகிறது. இது தொடர்பாக சமுர்த்தி முகாமையாளர் தெரிவிக்கையில் குரங்கு மீது மோதி வீதியில் விழுந்ததால் ஏற்பட்ட உராய்வுக் காயங்களுக்கு மருந்து கட்ட சென்ற போது விடுதியில் அனுமதித்தனர்.

அங்கு இருந்த தாதிகளிடம் பலதடவை கேட்டுக்கொண்டும் நீண்ட நேரமாக மருந்து கட்டாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதாக உரிய முறைப்படி அறிவித்து விட்டு வெளியேறி தனியார் மருந்தகத்தில் மருந்து கட்டியதாகத் தெரிவித்தார். வைத்தியசாலையின் அலட்சியமான செயற்பாடு நோயாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.