குடாநாட்டு மக்களுக்கு இலவசமாக உள்ளி விநியோகிக்க ஆயத்தமாகின்றார் ஐ.தே.க வின் யாழ் அமைப்பாளர்?? (Photos)
யாழ் மாவட்டத்தின் ஐ.தே.க வின் அமைப்பாளர் என யாழ் ஊடக அமையத்தில் பேட்டிகள் கொடுத்த முன்னாள் ஐ.தே.க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புலிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டவருமான மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரன் இந்த ஊரடங்கு நெருக்கடி நேரத்திலும் கொழும்பில் இருந்து தற்போது யாழ்ப்பாணத்தில் கடும் தட்டுப்பாடாக உள்ள உள்ளியை இறக்குமதி செய்து தனது கடையில் வைத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் அவரது கடையுடன் கூடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனும் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் மண்ணெய் வியாபாரம் செய்து அந்தக் காலத்தில் பொருளாதாரத் தடைகள் இருந்த நேரத்தில் கப்பல் மூலம் பொருட்கள் இறக்குமதி செய்து அதை பலமடங்கு விலை கூட்டி யாழ்ப்பாண மக்களுக்கு விற்றே பணக்காரன் ஆனார் என பலரும் தெரிவித்துவந்தனர். ஆனால் இவற்றை அவரது தம்பியான துவாரகேஸ்வரனும் மனைவியான விஜயகலாவும் மறுத்து வந்திருந்தனர். மகேஸ்வரன் மக்களுக்கு உதவி செய்தே பெரும் பணக்காரராகி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம்.
அதே போல் தற்போது துவாரகேஸ்வரனும் இந்த உள்ளியை மக்களுக்கு இலவசமாக கொடுக்க இறக்கி வைத்திருக்கலாம் என கருதி துவாரகேஸ்வரனின் நண்பர்கள் என கூறுபவர்கள் சிலரிடம் விசாரித்த போது துவாரகேஸ்வரன் உள்ளியை மக்களுக்கு அறாவிலையில் ஒரு போதும் விற்க மாட்டார். அவர் குறித்த உள்ளியை மக்களுக்கு இலவசமாக கொடுக்க உள்ளதாக நாம் அறிகின்றோம் என கூறினார்கள்.
இதன் உண்மைத்தன்மையை அறிவதற்காக யாழில் உள்ள ஊடகவியலாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு உள்ளி தொடர்பாக துவாரகேஸ்வரனை விசாரித்து தருமாறு நாம் கேட்ட போது குறித்த ஊடகவியலாளர் ‘துவாரகேஸ்வரன் யாழ்ப்பாண வடிவேலு என்று பெயர் எடுத்தவன். அவனுடன் நான் தொடர்பு கொண்டு உள்ளியை இலவசமாக விற்கப் போறீா்களா என்று கேட்டால் அவன் அவ்வாறு விற்கவில்லை எனின் என்னை பச்சைத் துாசணத்தால் அறம்புறமாய் ஏசுவான்… அத்துடன் தன்ர பேஸ்புக்கில் என்ர படத்தையும் போட்டு கண்டபடி எழுதுவான்… அதோட நான் அவனுடன் தொடர்பு கொண்ட தொலைபேசி இலக்கத்தையும் பொலிசிடம் கொண்டு போய் கொடுத்து தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள் என கேஸ் போடுவான்…. நான் உந்த வேலை பார்க்க மாட்டேன்‘ என கூறியதுடன் துவாரகேஸ்வரனின் தொலைபேசி இலக்கமான 0777674119 என்ற இலக்கத்தையும் எமக்கு அனுப்பி அவரை நீங்களே தொடர்பு கொண்டு கேளுங்கள் என கூறினார்.
துவாரகேஸ்வரன் ஏற்கனவே பச்சை துாசணத்தில் ஏசுவதும் தனது பேஸ்புக்கில் இந் நாள் மாண்பு மிகு ஜனாதிபதி கோத்தபாயவையே தாக்கி எழுதியிருந்ததும் பின்னர் அவர் பதவியேற்ற பின்னர் அந்த பதிவை அகற்றியிருந்ததும் எமக்குத் தெரிந்த விடயம். ஆதலால் நாம் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்ல. ஏற்கனவே துவாரகேஸ்வரன் நல்லாட்சி அரசு இருந்த காலத்தில் தனக்கு எதிரானவர்களை கோத்தபாயாவின் அடிவருடிகள் எனவும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் எனவும் எழுதி வந்தவர் என்பதும் அதனால் அவருடன் அந்த நேரத்தில் யாரும் முரண்படுவதில்லை என்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனவே யாழ்ப்பாண குடாநாட்டு மக்களாகிய நீங்கள் துவாரகேஸ்வரன் இறக்கி வைத்திருக்கும் உள்ளி இலவசமாக விநியோகிக்கவா அல்லது நியாய விலையில் விநியோகிக்கவா அல்லது உங்கள் அண்ணன் மகேஸ்வரன் அறாவிலையில் யாழ்ப்பாண மக்களிடம் கப்பலில் பொருட்கள் இறக்கி விற்று பணக்காரன் ஆகியது போல் ஆகுதவற்காகவோ என கேட்டு அறிந்து கொள்வதுடன் அவரிடம் என்ன விலையில் உள்ளியைப் பெறலாம் என கேட்டு எமக்கும் அறியத்தந்தால் நாம் அவற்றையும் இந்த பதிவுடன் இணைத்து வெளியிடுவோம்.
இதே வேளை துவாரகேஸ்வரன் அவர்களும் உள்ளி தொடர்பான விளக்கத்தை அல்லது இந்த பதிவு தொடர்பாக கருத்தை எமக்கு எமது பேஸ்புக் பக்கத்தினுாடாக தெரியப்படுத்தினால் நடுவுநிலை தவறாது அவற்றையும் நிச்சயம் நாம் பிரசுரிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு – துவாரகேஸ்வரன் அவர்களே நாம் போட்ட இந்தப் பதிவு தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் எமது இந்த லிங்கில் உள்ள https://www.facebook.com/vampannews/
பேஸ்புக் பக்கத்தில் தொர்பு கொண்டு உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அதை விட்டு உங்கள் முகப்புத்தகத்தில் தவறான முறையில் எமது இணையத்தளம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதால் எமக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என்பதுடன் அத்துடன் தற்போது கொரோனா நேரத்தில் மிகவும் நெருக்கடியான நேரத்தில் தமது உயிரைத் துச்சமென மதித்து செயற்படும் பொலிசாரிடம் போய் எம்மைப் பற்றி முறையிட்டு அவர்களின் பெறுமதியான நேரத்தை வீணடிப்பதற்கோ முயலமாட்டீர்கள் என எண்ணுகின்றோம்.

