கண்டவாறு பதிவேற்றம் செய்வோர், செய்தி வெளியிடுவோர் கவனம்!! வந்துவிட்டது ஆப்பு!!
கொவிட் 19 தொடர்பில் செய்தி அறிக்கையிடலுக்கான சுகாதார அமைச்சின் பரிந்துரைகள்
கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடக நிறுவனங்களினால் கீழ் காணும் நடைமுறைகளை பின்பற்றினால், கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்கும் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
01. கொவிட் 19 தொடர்பில் செய்தி எழுதும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் பயன்படுத்தவும்.
02. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது, இனம் மற்றும் மதங்களை குறிப்பிட வேண்டாம்.
03. வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் நோயாளி மாத்திரமே என்பதை விடுத்து, அவர் நோயை பரப்பும் நபர் என்ற விதத்தில் செய்தி எழுத வேண்டாம்.
04. எச்சரிக்கை குறித்து தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதப்பட வேண்டுமே தவிர, தனிநபரின் கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம்.
05. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள் மற்றும் நோயாளர்கள் ஆகியோரின் படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம்.
06. உயிரிழந்த நபரொருவரின் உணர்வுப்பூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களை “தெளிவின்மைப்படுத்தி” பயன்படுத்துவது சிறந்ததாக அமையும்.
07. மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையில் செய்தி அறிக்கையிடுவதை தவிர்க்கவும்.
08. கொவிட் 19 நிலைமை மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொருவருக்கு இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.


