புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனங்காணப்பட்ட மருதானை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.