Home புதினங்களின் சங்கமம் யாழ் பருத்திதுறை முடக்கமா?? ‘திரு‘ வீடியோ சென்றர் முதலாளியின் தாய்க்கு கொரோனாவா??

யாழ் பருத்திதுறை முடக்கமா?? ‘திரு‘ வீடியோ சென்றர் முதலாளியின் தாய்க்கு கொரோனாவா??

யாழ் பருத்திதுறையில் உள்ள வீடியோ சென்றர் ஒன்றின் முதலாளியின் தாய்க்கு கொரோனா என்று சமூகவலைத்தளங்களில் பரவிய தகவல்கள் வதந்தி என தெரியவருகின்றது. இவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் தொடர்பாக பொலிசார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூகவலைத்தங்களில் வெளியாகும் குறித்த பொய்யான செய்தி கீழே தரப்பட்டுள்ளது……

பருத்தித்துறை நகரை அண்டிய ஒருவருக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்பட்டிருப்பதால் பருத்தித்துறை நகரமே தனிமைப்படுத்தும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறையின் திரு
போட்டோ ஸ்ரூடியோவின் உரிமையாளரின் மனைவியின் தாயார் சுவிஸ் பாதிரியாரிடம் ஆசிர்வாதம் பெற்ற நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டும் அதனை மறைத்து வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு தற்போது காய்ச்சல் அதிகரித்ததால் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு கொரோனா பரிசீலனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டதுடன் அவரது இல்லம் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் பருத்தித்துறை நகரம் முழுமையாக தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.