Home புதினங்களின் சங்கமம் யாழில் வீட்டாருடன் சண்டையிட்டு வெளியேறிய குலசிங்கம் சடலமாக மீட்பு!

யாழில் வீட்டாருடன் சண்டையிட்டு வெளியேறிய குலசிங்கம் சடலமாக மீட்பு!

?????????????????????????????????????????????????????????

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதியவர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்