புதினங்களின் சங்கமம்

யாழில் 21 வயது இளைஞன் படுக்கையிலேயே மரணமானது ஏன்?

வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் இரவு உணவை உட்கொண்டு விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மகன் எழும்பாததை அடுத்து தாயார் சென்று எழுப்ப முற்பட்டுள்ளார். அப்போது மகன் அசைவின்றி காணப்பட்டார். உடனடியாக மகனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.