புதினங்களின் சங்கமம்

ஊரடங்கு நேரத்தில் நிறை வெறியில் நின்ற பொதுஜன பெரமுனகட்சி அமைப்பாளர் யாழ்ப்பாணத்தில் கைது!!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நேற்றிரவு(24) மதுபோதையில் நடமாடித் திரிந்த பொதுஜன பெரமுன கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர் வட்டுக்கோட்டைத் தொகுதியின் அமைப்பாளர் திருலோகநாதன் என பொலிஸார் தெரிவித்தனர் .நேற்று இரவு பொலிஸார் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது இவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுபோதையில் கைது செய்யப்பட்ட இவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதே வேளை இவ்வாறான கேவலம் பிடித்தவர்களை குறித்த கட்சியில் இணைத்தவர்கள் யார் என்பதை கட்சியின் தலைமைப்பீடம் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறித்த கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.