கீரிமலையில் இறந்தவர்களுக்கு சில நாட்கள் கிரிகைகள் செய்யமுடியாது!! கீரிமலை அந்தியேட்டி மடமும் மூடப்படுகின்றது!!
தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மறு அறிவித்தல் வரை சிறிது காலத்திற்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன் (அந்தியேட்டி) செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கீரிமலை அந்தியேட்டி மட பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

