புதினங்களின் சங்கமம்

தொண்டை நோவுடன் உடல் வெப்ப நிலையும் கூடுகின்றது என்று உணர்ந்தால் உடன்

உங்களுக்கு தொண்டை நோவுடன் உடல் வெப்ப நிலையும் கூடுகின்றது என்று உணர்ந்தால் உடன் ??

1 மேசைக்கரண்டி சின்ன சீரகம்
1 மேசைக்கரண்டி மிளகு
10 பல்லு உள்ளி
ஒரு 50 கிராம் இருக்க கூடிய இஞ்சி
4 வெற்றிலை
கொஞ்சம் தேன்.

ஒரு பாத்திரத்தினுள் 1 லீட்டர் நீர் எடுத்து அதனுள் ஒரு மேசைக்கரண்டி சின்ன சீரகம், 1 மேசைக்கரண்டி முழு மிளகு, பத்து பற்கள் உள்ளி, 50 கிராம் இஞ்சி போன்றவறை ( இஞ்சியும், உள்ளியும் நன்றாய் நசித்தபின் போடவேண்டும்) போட்டு 20 நிமிடங்கள் (500 மில்லிலீட்டர்கள் ஆக வரும் வரை) கொதிக்கவைக்கவேண்டும்.

அதன் பின் 4 வெறிலைகளை கிழித்து அந்த பாத்திரத்தினுள் போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைத்தபின் அடுப்பில் இருந்து எடுத்துவிட வேண்டும். கொஞ்சம் ஆறியபின் அதனை வடிகட்டி எடுத்து அந்த வெதுவெதுப்பான நீரினுள் ஒரு கப்புக்கு 2 மேசைக்கரண்டி தேன் கலந்து குடித்தால் ….

சகலவித வைரஸ் காய்ச்சல்களும் பறந்து போகும்.

இது நான் இப்பொழுது செய்து பார்த்து வெற்றிகண்டேன்.

இன்று உடல் வெப்பநிலை சடுதியாய் இறங்கிவிட்டது.