புதினங்களின் சங்கமம்

சுவிஸ் மதபோதகர் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது!! அங்கஜனுக்கும் தொடர்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆராதனையில் தலைமை தாங்கிய சுவிஸ்சர்லாந்து போதகர் போல் சற்குணராசாவுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜாநேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய போதகர், பங்கேற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி கோரோனா தொற்றை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

“போதகருக்கு கோரோனா ரைவஸ் தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனை நேர்மறை (Positive) என வந்துள்ளது. ஆனால் அவர் சுகமாக உள்ளார். நாம் அவர் சுகமடைவதற்காக விசுவாசிக்கின்றோம்.

போதகருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கு வழங்கமுடியும்” என்று உதவிப் போதகர் அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜாநேசன் தெரிவித்தார்.

இதே வேளை அங்கஜன் இராமநாதன் சுவிஸ் போதகரின் உதவியாளரான யோசுவா ராஜநேசனுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அங்கஜனாலேயே அது வெளியே வந்துள்ளது என்றும் தெரியவருகின்றது.