யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட குழந்தை உட்பட 8 பேர் வவுனியாவில் கண்டு பிடிப்பு!! (Photos)
யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உட்பட 8 பேர் வவுனியாவில் இன்று (21.03) இணங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பணம், செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற மத போதனையை நடத்திய போதகர் சுவிஸ் திரும்பி சென்ற நிலையில் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
அவருடன் நெருங்கிப் பழகிய இருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ஆராதனையில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைவாக குறித்த போதனையில் கலந்து கொண்ட வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

