புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஜேர்மன் தமிழ்யுவதிக்கு யாழ் இஞ்சினியரை கட்டாயக் கலியாண முயற்சி!! விமானத்திலிருந்து யுவதி ஓட்டம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள 27 வயதான இஞ்சினியர் ஒருவருக்கு ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ்யுவதியை யுவதியின் விருப்பத்திற்கு மாறகாக கட்டாயக் கலியாணம் கட்ட முயன்ற முயற்சி ஜேர்மன் பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியை கட்டாயப்படுத்தி விமானத்தி்ல் ஏற்றிக் இலங்கை கொண்டு செல்ல யுவதியின் பெற்றோரும் சகோதரர்களும் முற்பட்ட போது யுவதி விமானத்துக்குள் கத்திக் குளறியுள்ளார். உடனடியாக விமானத்தினுள் இருந்த விமான இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்ட போது பொலிசார் யுவதியை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யுவதியின் தாயின் உறவினரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் மகனே மாப்பிளையாவர்.. திருமணம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த போது யுவதி பலவழிகளிலும் அதை தடை செய்துள்ளார். இதனால் பொறுமையிழந்த பெற்றோர் யுவதியை இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக ஏமாற்றி இந்தியாவில் வைத்து கலியாணம் கட்ட முற்பட்டதாகவும் இளைஞர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இஞ்சினியர் மாப்பிளை அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் இலங்கையில் வைத்தே கலியாணம் செய்ய வேண்டும் என கூறியதால் யுவதியை இலங்கைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வர பெற்றோர் முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை குறித்த யுவதி யாழ்ப்பாண இஞ்சினியருடன் கதைத்துள்ளார் எனவும் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லியும் இஞ்சினிர் அதனை கருத்தில் எடுக்கவில்லை எனவும் ஜேர்மன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 ஆயிரம் யூரோ பணம் மற்றும் கொழும்பில் வீடு யாழ் நகரப்பகுதியில் 2 வர்த்தகநிலைய கட்டங்கள் மற்றும் கோண்டாவில் பகுதியில் 18 பரப்பு காணி என்பன மாப்பிளைக்கு சீதனமாக கொடுக்க ஜேர்மன் யுவதியின் பெற்றோர் சம்மதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.