முட்டாளாக மாறிய யாழ்ப்பாண அரச அதிபர்!! திகதி இடாத நோட்டீஸ்!! அக்கறையற்ற அறிக்கை!!
யாழ்ப்பாண அரசஅதிபர் முட்டாள்தனமான அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. அரியாலைப் பகுதியில் உள்ள மதவழிபாட்டுத் தலம் ஒன்றில் மத போதகருக்கு கொரோனா தொற்று என அந்த தேவாலயத்தின் பெயரையும் குறிப்பிடாது மக்களை குழப்பும் நடவடிக்கையில் அரசஅதிபரே ஈடுபட்டுள்ளார். அரியhலைப் பகுதியில் இந்துக் கோவில்கள் உட்பட எல்லாக் கோவில்களும் மத வழிபாட்டுத்தலங்களே…. ஆகவே இவ்வாறான அறிக்கையை வெளியிட்டு அரியாலைப் பகுதியில் உள்ள அனைவரையும் குழப்பிவிடும் நோக்கில் இந்த அறிக்கையை அரச அதிபர் வெளியிட்டுள்ளார் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே யாழ்ப்பாண அரச அதிபர் கொரோனா தொடர்பாக பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றார் என கண்டனங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துவரும் நேரத்தில் குறித்த இந்த அறிக்கையும் அவரது பொறுப்பற்ற தனத்தை காட்டுவதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.


