புதினங்களின் சங்கமம்

ஊரடங்கு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சீன் போட்ட காவாலிகள்!! வவுனியா பொலிசாரால் துரத்தித் துரத்தி கைது!!

வவுனியா பொலிசாரால் இரு இளைஞர்கள் இன்று இரவு விரட்டிப் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இருவரும் இன்று (20) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிசார் வழி மறித்துள்ளனர். எனினும் பொலிசாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிசென்றனர்.

இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தலைமையிலான 10க்கு மேற்பட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் துரத்திச்சென்று பூங்கா வீதியில் வைத்து மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்

கைது செய்யப்பட்ட இருவரும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிசாரின் சைகையை மீறி பயணித்தமை, வேகமாக செலுத்தியமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் இதன்போது தெரிவித்தனர்.

கைது செய்த இருவரையும் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றி சென்றிருந்தனர்.