யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கடற்பகுதி ஊடாக அடையாளம் தெரியாத சிலர் படகுகள் மூலம் நாட்டிற்குள் வந்துள்ளதாக தெரிவித்து இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதி மீனவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

