லண்டனிலிருந்து இலங்கை வந்த தமிழன் இவர்தான்!! பழகியவர்கள் தயவு செய்து வைத்தியசாலைக்கு போகவும்!!(Photos)
வட்டமிடப்பட்டுள்ள இந்த நபர்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியாகியுள்ளது. அதனை இங்கு தந்துள்ளோம்….
மேலும் இவர் கடந்த மார்ச் 13 ம் திகதி பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்துள்ளார்.
இதன் போது விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என்று தெரியவில்லை, இருந்தாலும் தனிமைப்படுத்தப்படவில்லை.
வரும்போதே சுகவீனமுற்றிருந்தார் என்ற தகவலும் வருகிறது.
ஏனெனில் குருக்கள் மடத்தைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு நகரிலேயே தங்கியிருந்துள்ளார் மேலும் பல இடங்களுக்கும் விஜயம் செய்துள்ளார். இப்பதிவின் நோக்கம் தயவு செய்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
மிக கவனமாகவும் இருங்கள்.
நன்றி.
இவரும் இவரது சில நண்பர்ளும் சில தினங்களுக்கு முன் புல்லுமலை சென்று வந்ததாக தகவல்… ஆனால் அவர்கள் கரடியாறுடன் திரும்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவர் விரைவில் குணமடைந்து எமது சமூகத்துடன் இனைய வேண்டும்.
அவதானமாக இருக்கவும்.
நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்போம்.

