புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் மீண்டும் அற்புதம்!! 30 வயது ஆசிரியைக்கு ஒரே நேரத்தில் 4 குழந்தைகள்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த 2வது சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆசிரியை ஒருவரே ஒரு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி சுரேஸ்குமார் குழந்தைகளையும், தாயையும் நலமாக மீட்டார்.

இதேபோல் இம்மாதம் 2ம் திகதியும் யாழ்.கட்டுவன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில்

4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.